சென்னை மாநிலக் கல்லூரி மாணவ, மாணவிகள் போராட்டம்!
04:41 PM Jan 28, 2025 IST
|
Murugesan M
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை மாநிலக் கல்லூரி வாயில் முன்பு மாணவ, மாணவிகள் போராட்டம் நடத்தினர்.
Advertisement
சென்னை மாநிலக் கல்லூரிக்கு உடனடியாக முழு நேர முதல்வரை நியமிக்க வேண்டும், ஸ்போர்ட்ஸ் கிளப் செயலாளராக உடற்கல்வி ஆசிரியரை மீண்டும் நியமிக்க வேண்டும், விளையாட்டு உபகரணங்களை உடனடியாக வாங்கித் தர வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 50க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கல்லூரியின் நுழைவாயில் முன்பு இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு எந்தவித அடிப்படை கட்டமைப்பு வசதிகளையும் கல்லூரி நிர்வாகம் ஏற்படுத்தி தரவில்லை என அவர்கள் குற்றச்சாட்டினர்.
Advertisement
Advertisement