சென்னையில் உணவு திருவிழா தொடக்கம்!
11:00 AM Dec 21, 2024 IST
|
Murugesan M
சென்னை மெரினா கடற்கரையில் உணவு திருவிழா கோலாகலமாக தொடங்கியது.
Advertisement
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் சார்பில், மகளிர் சுய உதவிக் குழுக்களை ஊக்குவிக்கவும், சத்தான ஆரோக்கியான உணவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், சென்னை மெரினாவில் உணவுத் திருவிழா நடத்தப்படுகிறது. இதனை துணை முதலமைச்சர் உதயநிதி தொடங்கி வைத்தார்.
உணவுத் திருவிழாவில், தமிழ்நாட்டின் ஒவ்வொரு மாவட்டங்களிலும் சிறப்பு வாய்ந்த மற்றும் சுவை மிக்க 100க்கும் மேற்பட்ட உணவு வகைகளை, 65 சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த பெண்கள் உடனடியாக சமைத்து, பரிமாறும் வகையில் 35 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
Advertisement
மேலும் சுய உதவிக் குழுக்கள் உற்பத்தி செய்த கைவினைப் பொருட்கள் உள்ளிட்ட 45 வகையான பொருட்கள் 3 அரங்குகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. வரும் 24ஆம் தேதி வரை மெரினாவில் உணவுத்திருவிழா நடைபெறுகிறது.
Advertisement
Next Article