செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சென்னை விமான நிலையத்தில் ரூ. 23 கோடி மதிப்பிலான உயர் ரக கஞ்சா பறிமுதல்!

01:06 PM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சென்னைக்கு விமானம் மூலம் கடத்தி வரப்பட்ட 23 கோடி ரூபாய் மதிப்பிலான உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

பாங்காக்கில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் விலை உயர்ந்த போதைப்பொருள் கடத்தப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் விமானத்தில் வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தபோது, ஒரு பெண் பயணி உட்பட 3 பயணிகளின் உடமைகளில் உயர்ரக கஞ்சா இருப்பது கண்டறியப்பட்டது. தொடர்ந்து கடத்தி வரப்பட்ட 23 கோடி ரூபாய் மதிப்பிலான 23 கிலோ உயர்ரக கஞ்சாவை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Advertisement

மேலும், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட 3 பேரையும் கைது செய்த அதிகாரிகள், சர்வதேச போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் அவர்களுக்கு தொடர்புள்ளதா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
23 kg of high-grade cannabis seizedBangkokchennai airportCustoms officials seized high-grade cannabisMAIN
Advertisement