செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடு ரத்து!

05:19 PM Jan 04, 2025 IST | Murugesan M

செல்லப் பிராணிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் விதித்த கட்டுப்பாடுகளை ரத்து செய்து சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Advertisement

சென்னையில் உள்ள தனியாரஅடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர்கள், செல்லப் பிராணிகள் வளர்க்க அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் கட்டுப்பாடுகள் விதித்து விதிகள் கொண்டு வந்தது.

அடுக்குமாடி குடியிருப்பில் திறந்த வெளியில் செல்ல பிராணிகள் மலம் கழித்தால் 10 நிமிடங்களில் சுத்தம் செய்ய வேண்டும் என்றும் இல்லாவிட்டால் 3 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இதேபோல, பிராணிகள் சிறுநீர் கழித்தால் 750 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும், செல்ல பிராணிகளை அழைத்துச் செல்ல லிப்ட்- ஐ பயன்படுத்த கூடாது எனவும், அடுக்குமாடி குடியிருப்போர் சங்கம் தடை விதித்திருந்தது.

இந்த விதிகள் செல்லாது என அறிவிக்க கோரி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் மூதாட்டி மனோரமா, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, குடியிருப்போர் சங்கத்தின் வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதி, செல்ல பிராணிகளுக்கு அபராதம் விதித்து நிறைவேற்றப்பட்ட விதிகள் செல்லாது என அறிவித்து உத்தரவிட்டார்.  மேலும், பிராணிகளுக்கு அபராதம் விதிக்கவும் தடை விதித்து நீதிபதி ஆணையிட்டார்.

Advertisement
Tags :
apartment owners' associationChennaiChennai City Civil CourtFEATUREDMAINrestrictions for pets
Advertisement
Next Article