செல்லப் பிராணிகள் விற்பனையகத்தில் சோதனை!
11:30 AM Dec 31, 2024 IST | Murugesan M
சென்னை திருவொற்றியூரில் செல்லப் பிராணிகள் விற்பனையகத்தில் சோதனை மேற்கொண்ட வனத்துறையினர், அங்கிருந்த அரிய வகை கிளி, ஆமை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசன் கடந்த சில தினங்களுக்கு முன் சென்னை திருவொற்றியூரில் உள்ள செல்லப் பிராணிகள் விற்பனையகத்திற்கு பாம்புடன் சென்று, அதற்கு கூண்டு வாங்கிச் சென்றார்.
Advertisement
மேலும் அங்கு பாம்புகளும் விற்கப்படுவதாக அவர் வீடியோ வெளியிட்டிருந்தார். இது சர்ச்சையானத் தொடர்ந்து, அங்கு வனத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். அப்போது,
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த கிளி, அரிய வகை ஆமை ஆகியவற்றை வனத்துறையினர் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
உரிய ஆவணங்கள் வழங்கினால் அவை திரும்ப ஒப்படைக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.
Advertisement
Advertisement