For the best experience, open
https://m.tamiljanam.com
on your mobile browser.

செல்லூர் ராஜூ பெயரை சொல்லி பல லட்சம் மோசடி! - போலீசாரிடம் புகார்

04:11 PM Dec 04, 2024 IST | Murugesan M
செல்லூர் ராஜூ பெயரை சொல்லி பல லட்சம் மோசடி    போலீசாரிடம் புகார்

மதுரையில், அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவின் உதவியாளர் எனக்கூறி, பண மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பழங்காநத்தம் டி.வி.எஸ் நகரை சேர்ந்த அதிமுக வட்டச் செயலாளர் ராஜாராம் என்பவர், தன்னை செல்லூர் ராஜூவின் உதவியாளர் என அறிமுகம் செய்து கொண்டு, பலரிடமும் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி 26 லட்சம் ரூபாய் பெற்றுள்ளார்.

Advertisement

ஆனால், அவர் சொன்னபடி அரசு வேலையும் வாங்கித்தரவில்லை, கொடுத்த பணத்தையும் திருப்பிக் கொடுக்கவில்லை என்பதால், பாதிக்கப்பட்டவர்கள், காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளனர்.

Advertisement
Advertisement
Tags :
Advertisement