செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகள் - அண்ணாமலை விருப்பம்!

10:13 AM Dec 25, 2024 IST | Murugesan M

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் நூற்றாண்டு விழாவை ஒட்டி பிரதமர் நரேந்திர மோடியின் செல்வமகள் திட்டத்தில் ஒரு லட்சம் குழந்தைகளை இணைப்பதே, தமிழக பாஜகவின் நோக்கம் என மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில், பிரதமர் மோடியின் குருவாக திகழ்ந்தவர் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய்  என கூறினார்.

பாகிஸ்தானுடன் நட்புறவை கொண்டுவர பெரு முயற்சி எடுத்தவர்  என்றும், வாஜ்பாயின் நம்பிக்கையால் பாஜக மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளதாகவும் அவர் கூறினார்.

Advertisement

வாஜ்பாய் நூற்றாண்டு விழாவை ஒரு வருடம் கொண்டாட உள்ளதாகவும், ஒரு லட்சம் குழந்தைகளை செல்வமகள் திட்டத்தில் இணைக்க உறுதிமொழி எடுத்துள்ளதாகவும் கூறினார்.

வாஜ்பாயின் வாழ்க்கை சரித்திரத்தை இளைய சமூதாயத்தினருக்கு எடுத்து செல்ல வேண்டும் என்றும் அண்ணாமலை கேட்டுக்கொண்டார்.

Advertisement
Tags :
former prime minister vajpayeeMAINSelvamagal schemeState BJP President AnnamalaiTamil Nadu
Advertisement
Next Article