செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சேலத்தில் நெடுஞ்சாலை பணியின் போது வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து விபத்து!

08:30 AM Jan 31, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சேலத்தில் நெடுஞ்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்த இடத்தில், கேஸ் கசிவால் வாகனத்தில் இருந்த சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கொங்கணாபுரம் அருகேயுள்ள எட்டிக்குட்டை பகுதியில் நான்கு வழிச்சாலை பணிகள் நடந்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக புதிதாக போடப்பட்ட தார் சாலையில் WHITE MARKER போடும் பணி நடைபெற்றது. இதில் 6 தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த நிலையில், பணியில் ஈடுபடுத்தப்பட்ட EICHER வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர், கேஸ் கசிவால் வெடித்து தீவிபத்து ஏற்பட்டது.

சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த எடப்பாடி தீயணைப்பு துறையினர், துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்தனர். விபத்தில் ஒரு தொழிலாளிக்கு காலில் லேசான தீக்காயம் ஏற்பட்ட நிலையில், அவர் சிகிச்சைக்காக கொங்கணாபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

Advertisement

இந்த சம்பவம் தொடர்பாக கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Tags :
MAINsalemgas cylinder explosionEttikuttaiKonganapuram.Edappadi fire department
Advertisement