சேலம் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 6 பேருக்கு உடல் நலம் பாதிப்பு : சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழப்பு!
01:15 PM Jan 31, 2025 IST
|
Murugesan M
சேலம் அரசு மருத்துவமனையில் ஊசி போட்ட 6 பேருக்கு திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Advertisement
சேலம் அரசு மருத்துவமனையில், சர்க்கரை நோய் உள்ளிட்டவைகளுக்காக அறுவை சிகிச்சை செய்த 30 -க்கும் மேற்பட்டோர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று இரவு நோயாளிகளுக்கு ஊசி மூலம் மருந்து செலுத்தப்பட்டதில், 6 பேருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
Advertisement
இதில், சிகிச்சை பலனின்றி வேணுகோபால் என்பவர் உயிரிழந்தார். இதனையடுத்து, அவரது உடல், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Advertisement