செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சேலம் அருகே இணைப்புச் சாலை அமைக்காததற்கு எதிர்ப்பு - கிராம மக்கள் சாலை மறியல் !

09:14 AM Jan 29, 2025 IST | Sivasubramanian P
featuredImage featuredImage

சேலம் மாவட்டம் மணிவிழுந்தான் பேருந்து நிறுத்தம் அருகே இணைப்புச் சாலையை அமைக்காத நெடுஞ்சாலைத் துறையை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள மணிவிழுந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட வடகுமரை, மணிவிழுந்தான் காலனி, சார்வாய், சார்வாய் புதூர் உள்ளிட்ட கிராமங்களில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

இதனிடையே ஆத்தூரில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள இரண்டு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக அமைக்கும் பணிகள் நடைபெற்று முடிவடையும் நிலையில் இருக்கின்றன.

Advertisement

ஆனால் மணிவிழுந்தான் பேருந்து நிறுத்தம் அருகே நெடுஞ்சாலையில் இணைப்புச் சாலை அமைக்காதததால் அப்பகுதி மக்கள் சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் சுற்றிச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியரிடம் பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் மணிவிழுந்தான் தேசிய நெடுஞ்சாலையில் கற்களை போட்டு திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதனிடையே அவ்வழியாக காரில் வந்த கள்ளக்குறிச்சி மாவட்ட மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை வீடியோ எடுத்ததுடன் தனது காருக்கு வழி விடச் சொல்லி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் காரை எடுக்க விடமால் சக்கரங்கள் முன் கற்களை போட்டு மோட்டார் வாகன ஆய்வாளரை காருடன் சிறைபிடித்தனர். தகவலறிந்து வந்த போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Advertisement
Tags :
AthurCharvaiCharvai Puthurconnecting road issueMAINManivizhundan bus standManivizhundan Colonyprotesting against the Highways DepartmentsalemVadakumaraiVillagers protest
Advertisement