செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சேலம் சிவதாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

05:21 PM Apr 01, 2025 IST | Murugesan M

சேலம் மாவட்டம், சிவதாபுரத்தில் அடிப்படை வசதிகள் இல்லையெனப் பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

Advertisement

சிவதாபுரத்திலிருந்து ஆண்டிப்பட்டி செல்லும் சாலையில் ஏராளமான குடும்பங்கள் வசித்து வரும் நிலையில், கடந்த மழையில் சாலை அடித்துச் செல்லப்பட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமின்றி பாதாள சாக்கடை வசதியில்லாததால், வீடுகளில் குழி வெட்டிக் கழிவுநீரை தேக்கிவைப்பதால் கொசு தொல்லையால் அவதிக்குள்ளாகி வருவதாகவும், 2 கிலோ மீட்டர் தூரம் சென்று குடிநீரை எடுத்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

Advertisement

எனவே, தங்கள் பகுதியில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement
Tags :
MAINசேலம்பொதுமக்கள் குற்றச்சாட்டு
Advertisement
Next Article