சேலம் மாநகராட்சியில் முறைகேடு? - மாமன்ற கூட்டத்தில் இருந்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு!
12:33 PM Jan 31, 2025 IST
|
Sivasubramanian P
சேலம் மாநகராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக கூறி மாமன்ற கூட்டத்தை புறக்கணித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
சேலம் மாநகராட்சியின் மாமன்ற கூட்டம் மேயர் ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக உறுப்பினர்கள் குடிநீர் விநியோகத்தை தனியாருக்கு தாரை வார்க்கும் திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், தூய்மை பணியாளர்களுக்கான தொகையை கூட்டுறவு சங்கத்தில் செலுத்தாத அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
இதற்கு திமுக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து இதை கண்டித்து அதிமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
Advertisement
Advertisement