சைஃப் அலிகான் கத்திக்குத்து விவகாரம் - சட்ட விரோதமாக ஊடுருவிய வங்க தேச இளைஞர்!
நடிகர் சைஃப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேச இளைஞர், இந்தியாவுக்குள் ஊடுருவியது தெரியவந்துள்ளது.
Advertisement
மும்பையில் நடிகர் சைஃப் அலிகானின் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அவரை கத்தியால் குத்திய வங்கதேசத்தை சேர்ந்த அமின் பக்கீரை போலீஸார் கைது செய்தனர். மேகாலயாவில் இருந்து வங்கதேசத்திற்கு செல்லும் துவாகி நதி வழியாக 7 மாதங்களுக்கு முன் அவர் இந்தியாவுக்குள் ஊடுருவியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
மேலும், தன் பெயரை விஜய் தாஸ் என மாற்றிக் கொண்ட அமின் பக்கீர், மேற்குவங்கம் சென்று ஒருவரது தயவில் சிம் கார்டு வாங்கியதும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. பின்னர், வேலை தேடி மும்பை வந்த அவருக்கு, அமித் பாண்டே என்பவர் உணவகத்தில் துாய்மை பணியாளராக வேலை வாங்கிக் கொடுத்திருக்கிறார்.
வேலை நேரம் முடிந்த பின் திருட்டில் ஈடுபட்டு வந்த அமின் பக்கீர், சைஃப் அலிகான் வீட்டுக்குச் சென்று சிக்கியதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.