சொகுசு வசதிகளுடன் தயாராகும் வந்தே மெட்ரோ ரயில்!
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே மெட்ரோ ரயில் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Advertisement
உலகின் மிகமுக்கிய ரயில் பெட்டி தொழிற்சாலையாக உள்ள பெரம்பூர் ஐசிஎஃப் ரயில் பெட்டி தொழிற்சாலையில் வந்தே பாரத் ரயில்கள் தயாரிக்கப்பட்டு, நாட்டின் பல்வேறு பெரு நகரங்களுக்கு இடையே இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சிறிய நகரங்களுக்கு இடையே குறுகிய வழித்தடங்களில் இயங்கும் வந்தே மெட்ரோ ரயில்களை தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
வந்தே மெட்ரோ ரயில்கள் நாட்டில் உள்ள 125 முக்கிய நகரங்களை இணைக்க உள்ளது. மேலும் வழக்கமான ரயில்களை போல் அல்லாமல் ஒரு பெட்டியில் 2 கழிப்பறைகள், 104 இருக்கைகள் என சொகுசு வசதிகளுடன் இந்த ரயில்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது.
நகர்ப்புற பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக 250 கிலோமீட்டர் தொலைவுக்குள் இந்த ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.