செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

சோதனையில் ஈடுபட்ட போலீசார் மீது மோதிய சரக்கு வாகனம்!

02:26 PM Jan 12, 2025 IST | Murugesan M

திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் மீது, சரக்கு வாகனம் மோதிய சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

Advertisement

சின்னாளப்பட்டி அருகே உள்ள பெருமாள் கோவில்பட்டியில் போலீசார் வழக்கம்போல் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வாகனமொன்று, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களின் மீதும், போலீசார் மீதும் பயங்கரமாக மோதியது. இதில் 3 இருசக்கர வாகனங்கள் பலத்த சேதமடைந்த நிலையில், போலீசாரும் காயமடைந்தனர்.

Advertisement

இதனையடுத்து சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த அதே ஊரை சேர்ந்த மருதமுத்து என்பவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். வாகனம் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதா? அல்லது கொலை முயற்சியா? எனும் கோணத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Advertisement
Tags :
cargo vehicle collidedinvestigationMAIN
Advertisement
Next Article