சோனாமார்க் சுரங்கப்பாதையை திறந்து வைத்த பிரதமர் மோடி!
ஜம்மு காஷ்மீரில் சோனாமார்க் சுரங்கப்பாதையை பிரதமர் மோடி திறந்து வைத்தார்.
ஜம்மு - காஷ்மீரின் கந்தேர்பால் மாவட்டத்தில் ககாங்கீர் மற்றும் சோனாமார்க்கை இணைக்கும் வகையில் சுமார் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் மதிப்பில் Z வடிவில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது.
கடல் மட்டத்தில் இருந்து 8 ஆயிரத்து 650 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ள சுரங்கப்பாதை, நிலச்சரிவு மற்றும் பனிச்சரிவு வழிகளை தவிர்க்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த சுரங்கப்பாதையை பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதனை தொடர்ந்து கட்டுமானப் பணிகளில் ஈடுபட்ட தொழிலாளர்களுடன் அவர் உரையாடினார். இந்த நிகழ்வில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, ஜம்மு - காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு-காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதபிரதமரின் வருகையையொட்டி ஜம்மு காஷ்மீர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.