ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கரில் ஆறு பேரை தெரு நாய்கள் கடித்து குதறிய சம்பவம் அரங்கேறி உள்ளது.
சோளிங்கரில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்துள்ளதாக பல நாட்களாக மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில், பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த தனபால், தமிழ்ச்செல்வி, பாரதி ஆகியோரை வெறிநாய் ஒன்று திடீரென் கடித்துக்குதறியது.
இதேபோல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த சுலோச்சனா என்பவரையும், பாட்டி குளம் பகுதியில் தண்ணீர் கேன் போடச் சென்ற நரசிம்மன் என்பவரையும் வெறிநாய்கள் கடித்துக் குதறின. இதனையடுத்து காயமடைந்த 6 பேரும், சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
சோளிங்கரில் பெரும் அச்சுறுத்தலாக இருக்கும் தெரு நாய்களை பிடிப்பதில் நகராட்சி நிர்வாகம் கவனம் செலுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.