சோழிங்கநல்லூர் அருகே குடிநீர் குழாய் உடைந்து சாலையில் வீணாக தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
சென்னை ஓஎம்ஆர் சாலை, சோழிங்கநல்லூர் சந்திப்பில் மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
மெட்ரோ ரயில் பணிக்காக பள்ளம் தோண்டும்போது தவறுதலாக குடிநீர் குழாய் உடைந்த நிலையில், குழாயில் இருந்து வெளியேறிய தண்ணீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால், சோழிங்கநல்லூரில் இருந்து கேளம்பாக்கம் மார்க்கமாக திருப்போரூர் வரை செல்லும் பேருந்து, லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மாற்று வழிகளில் திருப்பி விடப்பட்டுள்ளன. மேலும், சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.