ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிப்பு - மாநிலங்களவை துணை தலைவர் அறிவிப்பு!
04:01 PM Dec 19, 2024 IST | Murugesan M
மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்பட்டது.
மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர் பாரபட்சமாக செயல்படுவதாக கூறி, அவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை தாக்கல் செய்வதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சியினர் கடந்த வாரம் சமர்ப்பித்தனர்.
Advertisement
இந்த நிலையில், அந்தத் தீர்மானம் நிராகரிக்கப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் நாராயண் சிங் தெரிவித்துள்ளார். 14 நாட்களுக்கு முன்பாக நோட்டீஸ் சமர்ப்பிக்காதது மற்றும் நோட்டீஸில் ஜகதீப் தன்கரின் பெயரை தவறுதலாக குறிப்பிட்டது உள்ளிட்ட காரணங்களால், நம்பிக்கையில்லா தீர்மானம் நிராகரிக்கப்படுவதாக மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவித்துள்ளார்.
Advertisement
Advertisement