செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது - பாஜக பெண் நிர்வாகிகள் கைதுக்கு எல்.முருகன் கண்டனம்!

01:36 PM Jan 03, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "அண்ணா பல்கலைக்கழக மாணவி திமுக நிர்வாகியால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதைக் கண்டித்தும், குற்றத்தில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தியும், பாதிக்கப்பட்ட மாணவிக்கு நியாயம் கோரி தமிழக பாஜக மகளிர் அணியினர் நடத்த இருந்த நீதி கேட்பு பேரணிக்கு அனுமதி மறுத்ததோடு, மகளிர் அணி நிர்வாகிகளை வீட்டுக் காவலிலும் வைத்திருக்கும் போலி திராவிட மாடல் திமுக அரசுக்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான சம்பவத்தை மறைக்கும் முயற்சிலேயே திமுக அரசு ஈடுபடுகிறது. மக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை முன்னிறுத்தி போராடும் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக ஒடுக்குமுறையை ஏவி விடுவது கண்டிக்க தக்கது.

Advertisement

ஜனநாயக போராட்டங்களை காவல்துறையை ஏவி ஒடுக்கி விட முடியாது. இதற்கு எனது கடும் கண்டனங்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மாணவிக்கு நீதி கிடைக்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வில்லை. மாறாக பாலியல் குற்றவாளிகளை பாதுகாக்கவும் மக்களுக்கு தெரியாமல் மறைக்கவும் போலி திராவிட மாடல் அரசு செயல்படுகிறது. வரும் காலங்களில் இதற்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள் என அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
Anna UniversityAnna University campusbjp women wing arrestchennai policeDMKFEATUREDGnanasekaran arrestL Muruganmadurai bjp demoMAINminister l muruganstudent sexual assaulttamilnadu government
Advertisement