செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜனவரியில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் - உத்தரகண்ட் முதல்வர் திட்டவட்டம்!

05:25 PM Dec 18, 2024 IST | Murugesan M

உத்தரகண்டில்  ஜனவரி மாதம் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி உறுதிப்படத் தெரிவித்தார்.

Advertisement

அனைத்து மதத்தினருக்கும் பொதுவான உரிமையியல் சட்டங்களை நடைமுறைப்படுத்த பொது சிவில் சட்டம் வழிவகை செய்கிறது. நாட்டிலேயே முதன்முறையாக பொது சிவில் சட்டம் உத்தரகண்ட் சட்டப் பேரவையில் சில மாதங்களுக்கு முன் நிறைவேறியது.

இந்த நிலையில், வரும் ஜனவரியில் அந்த சட்டத்தை உத்தரகண்டில் அமல்படுத்துவதில் தாம் உறுதியாக இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக டேராடூனில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பொது சிவில் சட்ட நடைமுறைக்கான ஏற்பாடுகள் அனைத்தும் தயாராக இருப்பதாகவும்,  சுதந்திரத்துக்குப் பின் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தும் முதல் மாநிலம் உத்தரகண்ட் என்றும் பெருமிதம் தெரிவித்தார்.

Advertisement
Tags :
common civil codeFEATUREDMAINUttarakhand Chief Minister Pushkar Singh DhamiUttarakhand Legislative Assembly
Advertisement
Next Article