ஜனவரி 2 முதல் இலங்கைக்கு மீண்டும் கப்பல் போக்குவரத்து - கட்டணம் குறைப்பு!
11:16 AM Dec 18, 2024 IST | Murugesan M
நாகப்பட்டினத்தில் இருந்து இலங்கை காங்கேசன்துறைக்கு வரும் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் சேவை தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நாகை, காங்கேசன்துறை கப்பல் சேவை வடகிழக்குப் பருவமழை காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் ஜனவரி 2-ஆம் தேதி முதல் மீண்டும் கப்பல் போக்குவரத்து தொடங்குவதாகவும், பயணச்சீட்டு கட்டணத்தைக் குறைப்பதாகவும் கப்பல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் தெரிவித்தார்.
Advertisement
நாகையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இரு வழி பயணத்திற்கு 9,700 ரூபாயாக இருந்த கட்டணத்தை 8 ஆயிரத்து 500 ரூபாயாக குறைப்பதாகவும், பயணத்தின்போது 10 கிலோ வரை பொருட்களைக் கொண்டு செல்லலாம் எனவும் தெரிவித்தார்.
Advertisement
Advertisement