ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது - பிரதமர் மோடி திட்டவட்டம்!
ஜம்மு- காஷ்மீரில் எந்த சக்தியாலும் சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டு வர முடியாது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிர சட்டப் பேரவைத் தேர்தலை முன்னிட்டு துலேயில் பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வழிவகை செய்யும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 370-ஐ மீண்டும் கொண்டுவரும் நோக்கில், அங்குள்ள பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.
நாட்டில் பழங்குடியின மக்களிடையே பிளவை ஏற்படுத்த காங்கிரஸ் முயற்சிப்பதாகவும், மத ரீதியில் இதே நிலைப்பாட்டை அக்கட்சி கையாண்டதால்தான் தேச பிரிவினை நிகழ்ந்ததாகவும் பிரதமர் மோடி குற்றம்சாட்டினார்.
மேலும், மகாராஷ்டிராவில் பெண்களுக்கு நேரடி ரொக்கம் வழங்கும் திட்டத்துக்கு எதிர்க்கட்சியினர் முட்டுக்கட்டை போடுவதாக விமர்சித்த அவர், மகா விகாஸ் அகாடி கூட்டணியின் சுயரூபத்தை பெண்கள் உணர வேண்டுமென கேட்டுக்கொண்டார்.