செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜம்மு காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு - வெப்பநிலை மேலும் குறையும் என வானிலை மையம் எச்சரிக்கை!

11:33 AM Dec 10, 2024 IST | Murugesan M

டிசம்பர் மாதம் தொடங்கியதில் இருந்து வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் பனிப்பொழிவு அதிகரித்துள்ளது.

Advertisement

ஜம்மு காஷ்மீரின் கத்துவா மாவட்டத்தில் பனிப்பொழிவு ஆரம்பித்துள்ள நிலையில், சாலைகள் மற்றும் வீடுகளை பனி போர்த்தி ரம்யமாக காட்சியளிக்கின்றது. இதனையடுத்து சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.

பனிப்பொழிவால் சாலையில் இருபுறமும் பனிக்கட்டிகள் கொட்டிக் கிடக்கின்றன.  இதை வாகனத்தில் பயணித்தவாறு சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்தனர்.

Advertisement

ஸ்ரீநகரிலும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது, ஸ்ரீநகரில் 10 டிகிரி முதல் 2 டிகிரி வரை வெப்பநிலை குறையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில், அங்குள்ள தால் ஏரி கடும் பனிமூட்டத்துடன் காட்சியளிக்கிறது.

உத்தர பிரதேசத்தில் உள்ள ஆக்ராவிலும் அதிகாலையில் கடும் பனிமூட்டம் நிலவியது. உலக அதிசயங்களில் ஒன்றான திகழும் தாஜ் மஹாலை பனிமூட்டம் சூழ்ந்துள்ள காட்சிகள் கண்களை கவரும் வகையில் உள்ளது.

Advertisement
Tags :
December.FEATUREDjammu kashmirkashmir snowKathuaMAINSnowfallTourist
Advertisement
Next Article