செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து விவகாரம் - பாஜக எம்எல்ஏக்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றம்!

03:02 PM Nov 08, 2024 IST | Murugesan M

ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்துக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்த பாஜக எம்.எல்.ஏக்கள் வலுக்கட்டாயமாக சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Advertisement

ஜம்மு காஷ்மீரின் சட்டசபை கூட்டத்தொடர், 6 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 4ம் தேதி தொடங்கியது. மக்கள் ஜனநாயகக் கட்சியின் எம்.எல்.ஏ., வஹீத் பாரா, ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்கக் கோரி, தீர்மானம் தாக்கல் செய்தார்.

இந்த தீர்மானத்திற்கு பாஜக எம்.எல்.ஏக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும், சட்டசபை விதிகளை மீறி, தீர்மானம் தாக்கல் செய்த வஹீத் பாராவை இடைநீக்கம் செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில், 3வது நாளாக ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து கோரும் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்.எல்.ஏக்களுக்கும், பிடிபி உறுப்பினர்களுக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது/

இதனையடுத்து சபாநாயகரின் உத்தரவின்பேரில் பாஜக எம்.எல்.ஏக்கள் அவையில் இருந்து அவைக் காவலர்களால் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டனர்.

Advertisement
Tags :
BJP MLAs protestJammu and KashmirMAINPeople's Democratic Partyspecial status issue
Advertisement
Next Article