ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் போராட்டம்!
07:19 PM Jan 29, 2025 IST
|
Murugesan M
உதகை அருகே உல்லத்தி பகுதியில், ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி மலைவேடன் பழங்குடியின மக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Advertisement
உல்லத்தி ஊராட்சிக்கு உட்பட கிராமங்களில் 700-க்கும் மேற்பட்ட மலை வேடன் பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றன. இவா்களில் 350 பேருக்கு கடந்த 1995-ஆம் ஆண்டு வரை பழங்குடியினா் ஜாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது. அதன் பின் சான்றிதழ் வழங்குவது நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், ஜாதிச் சான்றிதழ் வழங்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பெற்றோரிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்தை நடத்தினர். இதில் உடன்பாடு எட்டப்படாததால், குழந்தைகளின் சான்றிதழை திரும்பி அளிக்குமாறு பள்ளி நிர்வாகத்திற்கு பெற்றோர் கடிதம் அளித்துள்ளனர்.
Advertisement
Advertisement