ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா - குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார் எடப்பாடி பழனிசாமி!
சென்னை, வானகரத்தில் அதிமுக சார்பில் ஜானகி ராமச்சந்திரன் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது.
தமிழகத்தின் முதல் பெண் முதலமைச்சரும், எம்ஜிஆரின் மனைவியுமான மறைந்த ஜானகியின் நூற்றாண்டு விழா, அதிமுக சாா்பில் வானகரத்தில் நடைபெற்றது. இந்த விழாவை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மேலும், புகைப்பட கண்காட்சியையும் பார்வையிட்டார்.
இதனைதொடர்ந்து ஜானகி ராமச்சந்திரன் திருவுருவப் படத்தை திறந்து வைத்த எடப்பாடி பழனிச்சாமி, நூற்றாண்டு மலரையும் வெளியிட்டார். மேலும், ஜானகி ராமச்சந்திரன் குறித்த குறும்படமும் காட்சிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து ஜானகி ராமச்சந்திரன் உடன் பயணித்த ராஜஸ்ரீ, நிர்மலா, சச்சு, ஜெயசித்ரா மற்றும் குட்டி பத்மினி ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசை இபிஎஸ் வழங்கினார். மேலும், ஜானகி ராமச்சந்திரன் குடும்பத்தினருக்கும் மரியாதை செய்யப்பட்டது
இந்த விழாவில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.