செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜாபர் சாதிக் ஜாமின் மனு மீது வரும் 17-ஆம் தேதி உத்தரவு - சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம்!

11:01 AM Dec 11, 2024 IST | Murugesan M

சட்டவிரோத பணபரிமாற்ற வழக்கில் ஜாமின் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தாக்கல் செய்த மனுக்கள் மீது, டிசம்பர் 17-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Advertisement

போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைதான முன்னாள் திமுக நிர்வாகி ஜாபர் சாதிக், சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி அமலாக்கத்துறையினரால் கடந்த ஜூன் 26-ம் தேதி கைது செய்யப்பட்டார்.

அவருக்கு உடந்தையாக செயல்பட்டதாகக் கூறி அவரது சகோதரர் முகமது சலீமும் கடந்த ஆகஸ்டு மாதம் கைது செய்யப்பட்டார்.

Advertisement

இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் ஜாபர் சாதிக் உள்ளிட்ட 12 பேர் மற்றும் 8 நிறுவனங்கள் மீது குற்றம்சாட்டி 302 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் ஆகியோர் ஜாமீன் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

அமலாக்கத்துறை விசாரணை நிறைவுற்றதுடன் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டுவிட்டதால் ஜாமீன் வழங்க வேண்டும் என ஜாபர் சாதிக் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

ஆனால் அவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்க அமலாக்கத்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எழில் வேலவன் ஜாமீன் மனு மீது வரும் 17-ம் தேதி உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்தார்.

Advertisement
Tags :
Chennai CBI special courtillegal money laundering case.Jafar SadiqJafar Sadiq bailMAINMohammed Salim
Advertisement
Next Article