செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜாபர் சாதிக் ஜாமின் மனு விசாரணை - வழக்கில் இருந்து விலகுவதாக நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா அறிவிப்பு!

05:50 PM Dec 21, 2024 IST | Murugesan M

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக் மற்றும் அவரின் சகோதரர் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையில் இருந்து விலகுவதாக சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா தெரிவித்துள்ளார்.

Advertisement

போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு, சட்டவிரோத பணப் பரிமாற்றத்தில் ஈடுபட்டதாகக் கூறி, திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கையும், அவரது சகோதரர் முகமது சலீமையும் அமலாக்கத் துறை கைது செய்தது.

இந்த வழக்கில் ஜாமீன் கோரி ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரர் முகமது சலீம் தாக்கல் செய்த மனுவை சிபிஐ நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.

Advertisement

இதையடுத்து, ஜாமீன் கோரி இருவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது ஆஜரான அமலாக்கத்துறை சிறப்பு வழக்கறிஞர், இருவரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து கடந்த 19-ம் தேதி உத்தரவு பிறப்பித்தாகவும், ஆனால் அதற்கு முன்பாகவே சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி விளக்கமளித்தார்.

இதனை ஏற்ற நீதிபதி, மனு நிலுவையில் இருந்தபோது எப்படி மனுத்தாக்கல் செய்யப்பட்டது என கேள்வி எழுப்பி, வழக்கை விசாரிக்க முடியாது என தெரிவித்து விசாரணையில் இருந்து விலகுவதாக தெரிவித்தார்.

Advertisement
Tags :
FEATUREDMAINEnforcement DirectorateJafar Sadiq bail petitionMadras High Court Judge A.T. Jagadish ChandraMoney Laundering Act case.
Advertisement
Next Article