ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை மனு - 10 நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!
ஜாமினை ரத்து செய்யக் கோரி அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் 10 நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement
சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய நிலையில் அவர் மீண்டும் அமைச்சராக பதவியேற்றார்.
இந்நிலையில் அமைச்சராக செந்தில் பாலாஜி மீண்டும் பதவியேற்றதால் வழக்கு விசாரணை முறையாக நடைபெறாது என கூறி ஜாமினை ரத்து செய்யக்கோரி அமலாக்கத்துறை உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது.
இந்த வழக்கு விசாரணையில் ஆஜரான செந்தில்பாலாஜி தரப்பு வழக்கறிஞர் அமைச்சராக பதவியேற்க கூடாது என உத்தரவிடப்படவில்லை என தெரிவித்தார்.
மேலும் வழக்கு தொடர்பாக விரிவான பதில் மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.
இந்த பதிலால் கோபமடைந்த நீதிபதிகள், செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர விரும்புகிறாரா? என்பதை தெரிவிக்க கூறி இருந்ததை முறையாக பின்பற்றவில்லை என கண்டனம் தெரிவித்தனர்.
மேலும் இந்த வழக்கில் 10 நாட்களில் பதில் மனுவை தாக்கல் செய்ய செந்தில்பாலாஜிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.