ஜார்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் - ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் பின்னடைவு!
ஜார்கண்ட் மாநிலம், கண்டே தொகுதியில் அம்மாநில முதல்வர் ஹேமந்த் சோரனின் மனைவி கல்பனா சோரன் பின்னடைவை சந்தித்துள்ளார்.
ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கு 2 கட்டங்களாக வாக்குப்பதிவு முடிந்துள்ளது. நவம்பர் 13-ம் தேதிமுதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கும், நவம்பர் 20-ம் தேதி 2-ம் கட்டமாக 38 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்றது.
இந்த தேர்தலில் முக்கிய வேட்பாளரான ஹேமந்த் சோரன் மனைவி கல்பானா சோரன் பார்க்கப்படுகிறார். தேர்தல் அரசியலில் அவர் முதன் முதலாக அடியெடுத்து வைத்துள்ளார். கண்டே சட்டமன்ற தொகுதியில், ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா சார்பில் கல்பனா சோரனும், பாஜக சார்பில் முனியா தேவி இடையே போட்டி நிலவுகிறது. இந்நிலையில், முதல் சுற்று முடிவில் பாஜக வேட்பாளர் முனியா தேவி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.