ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் - பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியல் வெளியீடு!
01:12 PM Oct 26, 2024 IST
|
Murugesan M
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
Advertisement
ஜார்க்கண்ட் சட்டப்பேரவைத் தேர்தல் அடுத்த மாதம் 13 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இருகட்டமாக நடைபெறுகிறது. இதனையடுத்து அங்கு தேர்தல் நடவடிக்கை சூடிபிடிக்க தொடங்கியுள்ளது.
இந்நிலையில், அங்கு பிரச்சாரம் மேற்கொள்ளும் நட்சத்திர பேச்சாளர்கள் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.
Advertisement
அதில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் ஜெ.பி. நட்டா, அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி, சிவராஜ் சிங் சவுகான், அசாம் முதலமைச்சர் ஹிமந்த பிஸ்வா சர்மா, உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றுள்ளன.
Advertisement