ஜார்க்கண்ட் சட்டமன்ற 2 ஆம் கட்ட தேர்தல் - 9 மணி நிலவரப்படி 12.71% வாக்குப்பதிவு!
ஜார்க்கண்ட் சட்டமன்ற 2 ஆம் கட்ட தேர்தல் இன்று நடைபெறும் நிலையில், பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.
81 சட்டமன்றத் தொகுதிகள் அடங்கிய ஜார்கண்ட் மாநிலத்தில் இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. பாஜவின் தேசிய ஜனநாயக கூட்டணியும், காங்கிரஸ், ஜேஎம்எம் கட்சிகள் அடங்கிய இண்டி கூட்டணியும் நேருக்கு நேர் மோதுகின்றன.
கடந்த நவம்பர் 13-ஆம் தேதி முதற்கட்டமாக 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. மீதமுள்ள 38 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது.
பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியப்பட்டு, அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கியது முதல் பொதுமக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர். மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
காலை 9 மணி நிலவரப்படி 12.71 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் வரும் 23ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.