ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!
ஜார்க்கண்ட் முதலமைச்சராக ஹேமந்த் சோரன் பதவியேற்றார்.
Advertisement
ஜார்க்கண்டில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 34 இடங்களையும், காங்கிரஸ் 16 இடங்களையும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் நான்கு இடங்களிலும் வென்றது.
இதையடுத்து, ஆளுநர் சந்தோஷ் காங்வாரை சந்தித்த ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியின் தலைவர் ஹேமந்த் சோரன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.
ஆளுநரின் ஒப்புதலை அடுத்து, ராஞ்சியில் உள்ள மொரபாதி மைதானத்தில் இன்று பதவியேற்பு விழா நடைபெற்றது. அப்போது ஜார்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளுநர் சந்தோஷ் காங்வார் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
விழாவில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால். உள்ளிட்டோர் பங்கேற்றனர்.