செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

தமாகா தலைவர் ஜி.கே.வாசன் பிறந்த நாள் - அண்ணாமலை வாழ்த்து!

09:51 AM Dec 28, 2024 IST | Murugesan M

இன்று பிற்நதநாள் கொண்டாடும் தமாகா தலைவர் ஜி.கே.வாசனுக்கு தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது  :"இன்று, 60 ஆவது பிறந்தநாள் கொண்டாடும், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான, அண்ணன் ஜி.கே.வாசனுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர் மோடி அவர்களின் அன்பைப் பெற்றவரும், சிறந்த பண்பாளருமாகிய வாசன்  நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தொடர்ந்து தனது மக்கள் பணிகள் மேற்கொள்ள, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என அண்ணாமலை கூறியுள்ளார்.

Advertisement

இதேபோல் பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது :

"இயன்றதை செய்வோம் இல்லாதவருக்கே என்கிற முழக்கத்தோடு ஏழை எளிய மக்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை தயாள குணத்தோடு தன் வாழ்நாள் முழுவதும் செய்து தன்னைக் காண வருபவர்களுக்கு விருந்தோம்பல் அளித்து பிறர் வயிறு நிறைவதைக் கண்டு மனம் நிறைந்து மகிழ்ந்த மகத்தான மனிதர் தமிழக மக்களின் இதயங்களில் பொன்மனச் செல்வனாக நீக்கமற நிறைந்திருக்கும் எனது அன்பு நண்பர் முன்னாள் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்த் அவர்களின் நினைவு தினத்தில் அவருக்கு  புகழஞ்சலியை உரித்தாக்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.

இதேபோல் இன்று பிறந்த நாள் கொண்டாடும் தினமலர் ஆர்ஆர். கோபால்ஜிக்கு அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "இன்று பிறந்த நாள் கொண்டாடும், தினமலர் நாளிதழின் பதிப்பாளர்களில் ஒருவரும், இந்து தர்மார்த்த சமிதியின் அறங்காவலருமான, திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்களுக்கு இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். பத்திரிகை துறையிலும், ஆன்மீகப் பணிகளிலும் சிறப்பாகச் செயல்படும் திரு. ஆர்ஆர். கோபால்ஜி அவர்கள், நல்ல உடல் நலத்துடன், நீண்ட ஆயுளுடன் தனது சமூகப் பணிகள் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
annamalai greetingsgk vasan birthdayMAIN
Advertisement
Next Article