செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஆசியக் கோப்பை ஜூனியர் ஹாக்கி போட்டி - இந்தியா சாம்பியன்!

12:52 PM Dec 05, 2024 IST | Murugesan M

ஓமன் நாட்டில் நடைபெற்ற ஜூனியர் ஆசியக் கோப்பை ஹாக்கி போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

Advertisement

10-வது ஜூனியர் ஆசியக்கோப்பை ஹாக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற இப்போட்டியின் அரையிறுதி ஆட்டங்களில் இந்திய அணி 3 - 1 என்ற கோல் கணக்கில் மலேசியாவையும், பாகிஸ்தான் அணி 4 - 2 என்ற கோல் கணக்கில் ஜப்பானையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் நடப்பு தொடரில் தோல்வியே கண்டிராத இந்தியாவும், பாகிஸ்தானும் நேருக்கு நேர் மோதின.

Advertisement

தொடக்கம் முதலே விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் இறுதியில், இந்திய அணி 5 - 3 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.

Advertisement
Tags :
indai championIndiaJunior Asia Cup hockey tournamentMAINOmanpakistan
Advertisement
Next Article