செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜூன் மாதம் முதல் பிஎஸ்என்எல் 5G சேவை - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அறிவிப்பு!

01:21 PM Mar 25, 2025 IST | Ramamoorthy S
featuredImage featuredImage

பிஎஸ்என்எல் 5G சேவை ஜூன் மாதம் முதல் தொடங்கும் என மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

Advertisement

மத்திய அரசுக்கு சொந்தமான பிஎஸ்என்எல் நிறுவனத்தின் 4ஜி சேவை தொடர்பான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 4ஜி சேவையை வலுப்படுத்த நாடு முழுவதும் 75 ஆயிரத்துக்கு மேற்பட்ட டவர்கள் செயல்பாட்டில் உள்ள நிலையில், கூடுதலாக 25 ஆயிரம் டவர்கள் நிறுவப்படும் என அவர் கூறியுள்ளார்.

இந்த ஒரு லட்சம் டவர்களும் 5ஜி சேவைக்காக மாற்றியமைக்கும் பணி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறியுள்ள அவர், ஜூன் மாதம் முதல் 5ஜி சேவை தொடங்கும் என அறிவித்துள்ளார்.

Advertisement

மேலும், பிஎஸ்என்எல் உள்கட்டமைப்பை மேம்படுத்த 80 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், 3G சேவைகளை படிப்படியாக நீக்கும் பணி நடைபெற்று வருவதாக ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

Advertisement
Tags :
bsnl 5gBSNL's 5G service will start from June.FEATUREDMAINMinister Jyotiraditya Scindia
Advertisement