ஜூன் 25-இல் பூமிக்கு திரும்புகிறது சீன விண்கலம்!
01:23 PM Jun 05, 2024 IST | Murugesan M
நிலவின் தொலைதூர பகுதியில் தரையிறங்கிய சீன விண்கலம், பாறை மாதிரிகளை சேகரித்துக் கொண்டு ஜூன் 25-ஆம் தேதி பூமிக்குத் திரும்புகிறது.
நிலவின் தொலைதூர பகுதியான தென் துருவத்தின் அய்த்ன் பேசின் என்ற நிலப்பரப்பில், சீனாவின் சாங்கே-6 விண்கலம், சீன நேரப்படி இன்று அதிகாலை தரையிறங்கி சாதனை படைத்துள்ளது.
Advertisement
நிலவின் அடிப்பரப்பில் 2 கிலோ அளவிலான பொருட்களை சேகரித்து, அவற்றை உலோக கன்டெய்னரில் நிரப்பி சுற்றுவட்டப் பாதைக்கு அந்த விண்கலம் கொண்டு வரும்.
பின்னர், அந்த பொருட்கள் கேப்சூல் என்ற ஓடம் மூலம் சீனாவின் மங்கோலியா பாலைவனத்துக்கு ஜூன் 25-ஆம் தேதி கொண்டு வரப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
Advertisement
Advertisement