ஜூன் 26-ல் நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் : இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம்!
11:25 AM Mar 17, 2025 IST
|
Murugesan M
ஜூன் 26 ஆம் தேதி நாடு தழுவிய அளவில் ஒரு நாள் வேலை நிறுத்தம் நடத்தப்படும் என இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
Advertisement
சென்னை, சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள ஜானகி ராமன் அரங்கத்தில் அகில இந்திய மின்சார வாரிய ஊழியர்கள் சம்மேளனத்தின் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அப்போது பேசிய அதன் பொருளாளர் கோடைக் காலத்தில் மின்வெட்டு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும், மின்சார விநியோகத்தை அதானியிடம் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
Advertisement
Advertisement