ஜெயங்கொண்டம் அருகே குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்!
12:43 PM Mar 29, 2025 IST
|
Ramamoorthy S
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, கடந்த 15 நாட்களாக குடிநீர் வராததை கண்டித்து பொதுமக்கள் காலி குடங்களுடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
Advertisement
ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூர் ஊராட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மின்மோட்டார் பழுது காரணமாக இப்பகுதியில் கடந்த 15 நாட்களாக, குடிநீர் சரியாக விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுகுறித்து பலமுறை புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கப்படாததால், கல்லாத்தூர் சாலையில் காலி குடங்களுடன் அமர்ந்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதன் காரணமாக, விருத்தாசலம் - ஜெயங்கொண்டம் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Advertisement
Advertisement