ஜெயலலிதாவுக்கு எதிராக 1996-ல் வாய்ஸ் கொடுத்தது ஏன்? : நடிகர் ரஜினிகாந்த் விளக்கம்!
07:30 PM Apr 09, 2025 IST
|
Ramamoorthy S
ஜெயலலிதாவுக்கு எதிராக 1996-ல் வாய்ஸ் கொடுத்தது ஏன் என நடிகர் ரஜினிகாந்த் விளக்கமளித்துள்ளார்.
Advertisement
ஆர்.எம்.வீரப்பன் குறித்த ஆவணப்படத்தில் பாட்ஷா பட 100-வது நாள் விழாவில் வெடிகுண்டு கலாச்சாரம் பற்றி பேசியதாகவும், அமைச்சராக இருந்த ஆர்.எம்.வீரப்பனை மேடையில் வைத்து கொண்டு அப்படி பேசியிருக்க கூடாது என தெரிவித்துள்ளார்.
அப்போது தனக்கு அந்த அளவிற்கு தெளிவு இல்லை என்றும், தான் பேசியதால் அமைச்சரவையில் இருந்து ஆர்.எம்.வீரப்பனை ஜெயலலிதா நீக்கியதாகவும் கூறினார்.
Advertisement
ஆர்.எம்.வீரப்பனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கியதை எண்ணி தூக்கம் வரவில்லை என்றும், தான் ஜெயலலிதாவிடம் பேசுகிறேன் என்ற போது ஆர்.எம்.வீரப்பன் மறுத்தாகவும் தெரிவித்தார்.
Advertisement