செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

அமெரிக்கா பிடியிலிருந்து ஐரோப்பாவை மீட்க உறுதி - ஜெர்மனி புதிய அதிபர் பிரெட்ரிக்!

08:35 PM Feb 25, 2025 IST | Murugesan M
featuredImage featuredImage

கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரான ((Friedrich Merz )) பிரெட்ரிக் மெர்ஸ் ஜெர்மனியின் புதிய அதிபராக விரைவில் பதவி ஏற்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் முன்னால் உள்ள சவால்கள் என்ன? திட்டங்கள் என்ன? என்பது பற்றிய ஒரு செய்தி தொகுப்பு.

Advertisement

ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதார நாடான ஜெர்மனியில், நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை அதிபர் தேர்தல் நடை பெறும். மொத்தமுள்ள 630 தொகுதிகளில் 316 தொகுதிகளை கைப்பற்றும் கட்சியே ஆட்சியமைக்கும். 1990ம் ஆண்டுக்குப் பிறகு  தற்போது நடந்த அதிபர் தேர்தலில் முதல் முறையாக, ஒன்றிணைந்த ஜெர்மனியில், 83 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

வலதுசாரி கட்சியான கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சி (Christian Democratic Union (CDU) மற்றும் Christian Social Union (CSU) கட்சியும் சேர்ந்து 28.05 சதவீத வாக்குகளைப் பெற்று 208 இடங்களைக் கைப்பற்றியுள்ளன. மற்றொரு தீவிர வலதுசாரி கட்சியான ( AfD ) 20.8 சதவீத வாக்குகளுடன் 152 இடங்களைக் கைப்பற்றி இரண்டாம் இடத்தைப் பெற்றுள்ளது.

Advertisement

சமூக ஜனநாயகக் கட்சி (Social Democrats) வெறும் 16.4 சதவீத  வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளது. சமூக ஜனநாயகக் கட்சியின்  தலைவரும், பதவி விலகும்  அதிபருமான ஓலாஃப் ஷோட்ஸ், கட்சிக்கு ஒரு மோசமான தோல்வி என்றும் கூட்டணிப் பேச்சுவார்த்தைகளில் பங்கேற்கப் போவதில்லை என்றும் தெளிவுப் படுத்தியுள்ளார். எனவே,  கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் கட்சியின் தலைவரான Friedrich Merz பிரெட்ரிக்  மெர்ஸ் ஜெர்மனியின் அதிபராவது உறுதியாகியுள்ளது.

(( Friedrich Merz)) பிரெட்ரிக்  மெர்ஸின் வெற்றி ஐரோப்பாவுக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஐரோப்பிய ஒன்றியத்தை வளப்படுத்தவும், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் அச்சுறுத்தலை எதிர்கொள்ளவும், நேட்டோவை வலுப்படுத்தவும், உக்ரைனுக்கு முழுமையான  ஆதரவை வழங்கவும் ((Friedrich Merz)) பிரெட்ரிக்  மெர்ஸ் உறுதி கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஜெர்மனியில் மட்டுமில்லாமல் ஐரோப்பிய நாடுகள் அனைத்திலும்,நாட்டின் எல்லைகள் பாதுகாப்பாக இல்லை என்ற கருத்தும் சட்ட விரோத குடியேற்றம் குறித்த ஆழ்ந்த கவலையும் அதிகமாகி உள்ளது. அதன் காரணமாகவே ஜெர்மனியின் வாக்காளர்கள் தீவிர வலது சாரி கட்சிகளுக்கு ஆதரவாக திரும்பியுள்ளனர். சட்ட விரோதமாக நாட்டில் குடியேறியவர்கள் மீது ((Friedrich Merz)) பிரெட்ரிக்  மெர்ஸ் கடுமையான நடவடிக்கை எடுப்பார் என்று கூறப் படுகிறது.

தேர்தல் பிரச்சாரத்தின் போது, ஐரோப்பாவை விரைவில் வலுப்படுத்துவதே தனது முழுமையான வேலை என்று கூறியிருந்த ((Friedrich Merz)) பிரெட்ரிக்  மெர்ஸ், படிப்படியாக, அமெரிக்காவிலிருந்து ஐரோப்பா உண்மையிலேயே விடுதலையை பெறவேண்டும் என்றும் வலியுறுத்தி இருந்தார்.  ஐரோப்பாவின் தலைமையை ஏற்க தயாராக உள்ள ((Friedrich Merz)) பிரெட்ரிக்  மெர்ஸ், ஜெர்மனியின் இராணுவக் கட்டமைப்பை வலிமை படுத்தும் நடவடிக்கைகளுக்கு முன்னுரிமை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

ரஷ்ய அதிபர் புதின் மீது கடும் அதிருப்தியில் இருக்கும் ((Friedrich Merz))  பிரெட்ரிக்  மெர்ஸ்  ரஷ்யாவுக்கு எதிரான போரில் உக்ரைனுக்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ஜெர்மனி உதவும் என்றும் கூறப்படுகிறது.  மேலும், புதுப்பிக்கப் பட்ட எரிசக்தியை விடவும்,அணுசக்தியை உருவாக்க  ((Friedrich Merz))  பிரெட்ரிக்  மெர்ஸ்  தயாராக இருப்பதாக தெரிய வருகிறது. பிரிட்டன்  மற்றும் பிரான்சின் அணுசக்தி பாதுகாப்பு ஜெர்மனிக்கும் பொருந்துமா என்பது குறித்து, இரண்டு ஐரோப்பிய அணுசக்தி சக்தி நாடுகளும் கலந்துரையாட வேண்டும் என்று ஏற்கெனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

கஞ்சாவை பயன்படுத்த அனுமதிக்கும்  சட்டம் ஜெர்மனியில் நடைமுறையில் உள்ளது. 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் 25 கிராம் வரை அளவு கஞ்சாவை வைத்திருக்க அனுமதிக்கிறது. வீட்டுக்கு 3 கஞ்சா செடி வளர்க்கவும் சட்டம் இடமளிக்கிறது. மேலும், பொது இடங்களில் கஞ்சா புகைப்பது அனுமதிக்கப் படுகிறது.  கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட இந்த சட்டமே, போதைப்பொருள் தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதற்குக் காரணம் என்று ((Friedrich Merz))  பிரெட்ரிக்  மெர்ஸ்  குற்றம் சாட்டியுள்ளார். எனவே கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களுக்குத் தடை விதிக்கப்படலாம் என்றும் எதிர்பார்க்கப் படுகிறது.

அதிபராக வெற்றிப் பெற்ற பின் தனது ஆதரவாளர்கள் மத்தியில் உரையாற்றிய மெர்ஸ், ஜெர்மனியில் இனி மக்கள் நம்பிக்கைக்கு உரிய ஆட்சி நடைபெறும் என்று கூறியிருக்கிறார்.  ஒரு பக்கம் சீனா,இன்னொரு பக்கம் ரஷ்யா,மற்றொரு பக்கம் அமெரிக்கா என சிக்கித் தவிக்கும் ஐரோப்பாவுக்கு (Friedrich Merz)  பிரெட்ரிக்  மெர்ஸ் புதிய பாதை காட்டுவாரா ? என்பது தான் உலகத்தின் கேள்வியாக உள்ளது.

Advertisement
Tags :
FEATUREDGermany's new President Friedrich: Committed to saving Europe from the clutches of America!MAINஜெர்மனி புதிய அதிபர் பிரெட்ரிக்
Advertisement