செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

ஜோ பைடன் உள்ளிட்ட உலக தலைவர்களை சந்தித்த பிரதமர் மோடி!

09:51 AM Nov 19, 2024 IST | Murugesan M

பிரேசில் தலைநகர் ரியோ டி ஜெனிரோவில் தொடங்கிய ஜி-20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Advertisement

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த அமைப்புகளில் ஒன்றான ஜி-20 அமைப்பின் தலைமைப் பதவியை பிரேசில் வகித்து வருகிறது. அங்குள்ள ரியோ டி ஜெனிரோவில் ஜி-20 உச்சி மாநாடு நேற்று தொடங்கியது. இந்த உச்சி மாநாட்டில் இந்தியா, அமெரிக்கா, பிரேசில், சீனா, ஜெர்மனி, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள் பங்கேற்றனர்.

ஜி-20 மாநாட்டின்போது அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும், பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்தார். மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றது.

Advertisement

பைடனை சந்தித்தது தொடர்பான புகைப்படத்தை தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி, பைடனை சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சியான தருணம் எனப் பதிவிட்டார்.

Advertisement
Tags :
FEATUREDMAINPrime Minister Modi met world leaders including Joe Biden!
Advertisement
Next Article