செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டங்ஸ்டன் கனிம சுரங்க திட்டத்திற்கு எதிர்ப்பு - பேரணி சென்ற 5000க்கும் மேற்பட்டோர் மீது வழக்கு!

10:09 AM Jan 08, 2025 IST | Murugesan M

மதுரையில் டங்ஸ்டன் கனிம சுரங்கத் திட்டத்தை ரத்து செய்யக்கோரி தடையை மீறி பேரணியாக சென்ற 5 ஆயிரம் பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

மதுரை மாவட்டம், மேலூர் அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் தற்காலிமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த திட்டத்தை முழுமையாக ரத்து செய்யக்கோரி, முல்லைப் பெரியாறு ஒருபோக பாசன விவசாயிகள் சார்பில் மதுரையில் 5 ஆயிரம் பேர் பங்கேற்ற பேரணி நடைபெற்றது.

மதுரை தல்லாகுளம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் உள்ளே செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால், தமுக்கம் தமிழன்னை சிலை முன்பாக அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

இந்நிலையில், காவல்துறையின் தடையை மீறி பேரணி நடத்திய 5 ஆயிரம் விவசாயிகள் மீது தல்லாகுளம் போலீசார் 2 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Tags :
000 peoplecase against 5demo aganist tungsten mining project.FEATUREDMaduraiMAINMelur ArittapattiTallakulam policetungsten mining project.
Advertisement
Next Article