செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவு கைவிடப்படும் - விரைவில் அறிவிப்பு வரும் என அண்ணாமலை உறுதி!

09:35 AM Jan 11, 2025 IST | Murugesan M

பொங்கல் பண்டிகைக்கு பிறகு டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி அறிவிப்பார் என தமிழக பாஜக மாநில தலைவர்  அண்ணாமலை உறுதி அளித்துள்ளார்.

Advertisement

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள பதிவில் கூறியுள்ளதாவது : "மதுரை மாவட்டம் அ. வல்லாளப்பட்டி கிராமத்தில், பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் அனைத்துக் கட்சிகளையும் சார்ந்த சகோதர சகோதரிகளை நேரில் சந்தித்து, டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் திட்டத்தைக் கைவிடுவது குறித்துப் பேசும் வாய்ப்பு கிடைத்தது

மதுரை அரிட்டாப்பட்டி, அ. வல்லாளப்பட்டி, நாயக்கன்பட்டி கிராமங்களைச் சுற்றி அமையவிருந்த டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் முடிவை, நிறுத்தி வைத்திருப்பதாக,  மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி  அறிவித்திருந்தார். தமிழக அரசையும், சுரங்கம் அமைப்பது தொடர்பாக, மேற்கொண்டு எந்த நடவடிக்கைகளும் மேற்கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தியிருந்தார்.

Advertisement

மத்திய சுரங்கத்துறை அமைச்சர் கிஷன்  ரெட்டி, பொங்கல் பண்டிகைக்குப் பிறகு, சென்னை வரவுள்ளார்.  அவரை, நமது கிராமப் பெரியவர்கள் சந்தித்துப் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின் முடிவில், டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதைக் கைவிடும் முடிவை, நமது மத்திய அமைச்சர் அறிவிக்கவுள்ளார்.

விவசாயிகள் நலன் சார்ந்தே பிரதமர் மேடி எப்போதும் முடிவு எடுப்பார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பது நிச்சயம் கைவிடப்படும். எனவே, பொதுமக்கள் தங்கள் ஆர்ப்பாட்டத்தைக் கைவிட்டு, பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன்.

நமது பாரதப் பிரதமர் சார்பாகவும், அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என அண்ணாமலை கேட்டுக்கொண்டுள்ளார்.

Advertisement
Tags :
FEATUREDMaduraiMAINMinister Kishan ReddyPongal festivalTamil Nadu BJP State President Annamalaitungsten minesVallapatti
Advertisement
Next Article