டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தம் ரத்து - பிரதமருக்கு ஜி.கே.வாசன் நன்றி!
04:59 PM Jan 30, 2025 IST
|
Sivasubramanian P
டெல்லியில் நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் கிசன் ரெட்டிக்கு மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவருமான ஜி.கே.வாசன் நன்றி தெரிவித்தார்.
Advertisement
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறுவதையொட்டி டெல்லியில் அனைத்து கட்சி கூட்டம் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவது குறித்து ஆக்கப்பூர்வமான முறையில் தீர்வு காண வேண்டும் என கூறினார். மேலும் டங்ஸ்டன் ஏலத்தை ரத்து செய்த பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் கிசன் ரெட்டிக்கு நன்றி தெரிவித்தார்.
Advertisement
Advertisement