மதுரை அருகே டங்ஸ்டன் சுரங்கம் அமையாது : நாளை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் : அண்ணாமலை உறுதி!
டங்ஸ்டன் சுரங்கம் ரத்து தொடர்பாக நாளை அதிகார்ப்பூர்வ அறிவிப்பு வரும் என தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
Advertisement
தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மத்திய அமைச்சர் எல்.முருகன், தலைமையில் வல்லாளப்பட்டி, அரிட்டாபட்டி, கிடாரிப்பட்டி மற்றும் நரசிங்கம்பட்டியைச் சேர்ந்த விவசாயிகள் இன்று மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டியை டெல்லியில் சந்தித்துப் பேசினார்.
அப்போது மேலூர் தொகுதியில், டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உள்ளிட்ட விவசாயிகளின் கோரிக்கைகளை, மத்திய சுரங்கத்துறை அமைச்சர் பொறுமையாகக் கேட்டுக்கொண்டார். மேலும், பிரதமர் மோடி எப்போதும், கடினமாக உழைக்கும் நமது விவசாயிகளின் நலனுக்காகத் துணை நிற்பார் என்று நமது விவசாயிகளுக்கு அவர் உறுதியளித்தார்
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்கம் அமையாது என மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி உறுதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.