டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது - அண்ணாமலை வலியுறுத்தல்!
டங்ஸ்டன் சுரங்கம் விவகாரத்தில் தமிழக அரசு அரசியல் செய்யக் கூடாது என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
Advertisement
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மதுரை மேலூரில் டங்ஸ்டன் சுரங்கம் வராது என தெரிவித்தார்.
மக்களை திசை திருப்புவதற்காக ஞானசேகரனை அனுதாபி என முதலமைச்சர் கூறுவதாகவும் அவர் கூறினார். அண்ணாநகர் சிறுமி பாலியல் வழக்கில் விசாரணை அதிகாரி மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பினார்.
ஈ.வெ.ரா., குறித்து சீமான் பேசியதற்கான ஆதாரங்களை தாம் தருவதாகவும் தெரிவித்தார்.
ஈ.வெ.ரா., எந்த புத்தகத்தில் எழுதி இருக்கிறார் என்ற ஆதாரத்தை கொடுக்கிறேன். போலீசார் வீட்டிற்கு வந்தால் அந்த ஆதாரத்தை சீமான் கொடுத்தால் போதும். வேறு ஏதும் வேண்டாம் என்றும் அவர் கூறினார்.
இதனை பொதுவெளியில் பேச வேண்டியதில்லை என்பது தனது கருத்து என்றும் அவர் கூறினார். அரசியல் மாறிவிட்டது. மக்கள் அரசியலை புதிய பார்வையில் பார்ப்பதாகவும் அண்ணாமலை கூறினார். ஈ.வெ.ரா இதற்கு முன் பேசியது எல்லாம் பொதுவெளியில் பேசினால் தவறாக போய்விடும் என்றும் அண்ணாமலை தெரிவித்தார்.