டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து அண்ணாமலையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி - டிடிவி தினகரன் பாராட்டு!
01:23 PM Jan 28, 2025 IST
|
Sivasubramanian P
டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டுள்ளது பாஜக மாநிலத் தலைவர் அண்ணாலையின் முயற்சிக்கு கிடைத்த வெற்றி என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
Advertisement
இதுகுறித்து நமது செய்தியாளர் வீரகுமார், அவருடன் நடத்திய கலந்துரையாடலில், முதல்வர் என்ற அதிகாரத்தில் தங்களுக்கு தாங்களாகவே பாராட்டு விழா நடத்திக் கொள்வதாக தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் கூறினார்.
Advertisement
2026-ல் மக்களால் திமுக ஆட்சி முடிவுக்கு கொண்டு வரப்படும் என்ற நிலை நிலவுவதாகவும் அவர் கூறினார். குடும்ப ஆட்சி ஒழிந்து தேசிய ஜனநாயக ஆட்சி தமிழ்நாட்டில் மலரும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜல்லிக்கட்டு விழாவில் உதயநிதியும், இன்பநிதியும் மேலே ஏறாமல் கீழே இறங்கி காளைகளை அடக்கி இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்றும் தினகரன் குறிப்பிட்டார்.
Advertisement