செய்திகள் | உலகம்தேசம்தமிழகம்மாவட்டம்
விளையாட்டுசினிமாவணிகம்வாழ்வியல்ஆரோக்கியம்பண்பாடுதொழில்நுட்பம்

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை - ராம.சீனிவாசன்

03:54 PM Jan 24, 2025 IST | Sivasubramanian P

டங்ஸ்டன் சுரங்க திட்டத்திற்கு ஆரம்பத்தில் திமுக அரசு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை  என ராம.சீனிவாசன்பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

Advertisement

மதுரை மேலூர் அடுத்த அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் போராடி வந்தனர். டங்ஸ்டன் திட்டத்தை ரத்து செய்ய கோரி, தமிழக பாஜகவின் ஏற்பாட்டின் பேரில் டெல்லி சென்ற விவசாயிகள் மத்திய அமைச்சர் கிஷன் டெட்டியை சந்தித்து பேசினர்.

இதையடுத்து டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில், மதுரை விமான நிலையம் வந்தடைந்த ராம ஸ்ரீனிவாசன் மற்றும் விவசாயிகளுக்கு, கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Advertisement

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநில பொதுச் செயலாளர் ராம.சீனிவாசன், டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஆரம்ப கட்டத்தில் தமிழக அரசு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை எனக்கூறினார்.

மக்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஏலத்தை மத்திய அரசு ரத்து செய்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், டங்ஸ்டன் விவகாரத்தில் விவசாயிகளின் குரலாக பாடுபட்ட பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, மத்திய அமைச்சர் எல்.முருகன், உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.

 

Advertisement
Tags :
arittapatti tungsten miningBJP State General SecretaryDMK governmentFEATUREDmadurai farmers protest against tungsten projectmadurai mining projectmadurai tungsten miningMAINminingRama Srinivasantamil nadu tungsten miningtungstentungsten mineral miningtungsten mining cancelledtungsten mining in tamil nadutungsten mining maduraitungsten mining project.tungsten mining.
Advertisement
Next Article